தேடலை நோக்கி - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 13 ஜூன், 2021

தேடலை நோக்கி

 வாழ்க்கையில் நாம் எதை தேடி அழைக்கிறோம் என்பதை பற்றி விளக்கும் கவிதை வரிகள்

  பிறக்கும் குழந்தை தன் உணவை தேடி அழுகிறது
தவழும் போதும் எறும்பு கடிக்கும் போதும்
தட்டுத்தடுமாறி நடக்கமுயலும்போதும்
கீழே விழும்போதும் தாயின் பாசத்திற்க்காகவும்
தேடி அழுகிறது!
முதல்முதலாக பேச தொடங்கும் போதும்
உறவினர்களின் வருகையின் எதிர்ப்பார்ப்பினையும்
வளரும் போது தந்தையின் அரவணைப்பையும்
பள்ளியில் படிக்கும்போது  பெற்றோரின் ஆதரவையும்
கல்லூரியில் பயிலும் போது  பேராசிரியரின் வழிகாட்டுதலையும்
கல்லூரி முடித்து வெளியில் போகும்போதும்
மூத்தவர்களின் துனையையும்
வேலைக்காக குறுக்குவழியினையும் தேடுகிறோம்!

மீசை முளைத்த பிறகு‌‌ம்
இளம் பெண்ணாக மாறிய பிறகும்
 ஆசைநோக்கியும் ஓடுகிறோம்
அந்த ஆசையை நிறைவேற்ற 
பணத்தை தேடிஅலைகிறோம்
பணத்தை தேடும் வேலையிலே
உறவை உருவாக்கி கொள்ளவும்
தேடுகிறோம்
நேரத்தை வீணடிக்க அலைபேசியை தேடுகிறோம்
அலைபேசியில் சமூக ஊடகங்களை தேடுகிறோம்
சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியையும்
திருமணம் என்ற பெயரில் பொருளையும்
குடும்ப உறவுகளில் சந்தேகத்தை தேடுகிறோம்
பிள்ளைகளுக்காக அவமானங்களையும் தள்ளாடும் வயதில் பேரன் பேத்திகளின் அன்பையும்
பிள்ளைகளின் ஆதரவினையும் தேடும் வேளையிலே திரும்பி பார்க்கும் போது
நேரத்தினையும் பணத்தினையும் இழந்துவிட்டு!
வாழ்க்கை முடியும் வினாடிகளில்!
உணர்கிறேன்!
வாழ்க்கை பயணமே ஒரு தேடலே என்று!
விடியலை நோக்கி ஓடாமல் தேடலை நோக்கி ஓடுகிறோம்
 வாழ்க்கையை அனுபவித்து வாழாமல்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close