மீனவர்களின் வாழ்க்கை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

திங்கள், 27 ஏப்ரல், 2020

மீனவர்களின் வாழ்க்கை

வைகறைபொழுதைவசந்தமாக்க
விடிவெள்ளியாய் புறப்படுவோம்;
தீரா காதலுடன்
கடல் அன்னையை வணங்கி ,
தீர்க்கமுடன் கட்டுமரத்தில் ஏறிடுவோம்!
மீன்வலை சமுத்திரத்திலே விசிடுவோம் மீன்களை வலையிலிருந்து கழித்திடுவோம் தினமும் மீனை விற்றே,
எங்களின் பிழைப்பை நடத்திடுவோம்!

காலையிலே சென்ற கணவனும் காணவில்லை என்று ஏங்கிடுவோம் !
கட்டு மரத்திலே சென்றவர்
 கட்டையாக தான் திரும்புவாரோ
 என்று பதறிடுவோம் ;


மீன் வலை வீசும் எங்களுக்கு மாட்டுவது மீன்கள் மட்டுமல்ல
நாங்களும்தான்
கனநேர வாழ்வும்
கருவாடய்  மாறியதே
எங்களின் வாழ்க்கையை
கண்டு   அந்த  கடலும்
ஓஓஓ !!!!! என்ற
ஓலத்தால்  கண்ணீரை  பரிசளிப்பதால்
என்னவோ அந்தகடலும்- இன்று
 உப்பாய் மாறியதே.......?
எங்களின் துயரினைக் கண்டு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close