பள்ளி பருவத்தின் இனிமை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

பள்ளி பருவத்தின் இனிமை

 காலையில் அடிக்கும் மணியின் சத்தமும் அதைத்தொடர்ந்து நடக்கும் பள்ளியின் அசெம்பிளியும்
அசெம்பிளிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும்
அசெம்பிளியில் அதிகமாக பாசம் காட்டும் சூரியனும்
அதனால் மயங்கி விழும் நண்பர்களும் 
அதை சாக்காக வைத்து அசெம்பிளியை கட்அடிப்பவர்கள் என தொடங்கும் பள்ளியின் பருவம் சிறுவயதன் சுகம்தானே



படிப்பாளிகலெல்லாம் முதல் பெஞ்சிலிருந்து வகுப்புக்கு கொடுக்கும் சில தொல்லைகளும்
மாப்பிள்ளை பெஞ்சுக்காக சண்டை போடுபவர்களெல்லாம் கடைசி மூன்று பேஞ்சுகளிலிருந்து கொடுக்கும் ஆரவாரமும்
பாடங்களை கவனித்து விடைசொல்லும் ஆரவகோளாரும் 
பாடங்களை கவணிப்பது போல் ஆசிரியை சைட் அடிக்கும் காஜிகளும் 
நல்ல பெயர் வாங்க போட்டுக் கொடுக்கும் உளவாளிகளும்
சண்டையை கிளம்பிவிடும் சில சகுனிகளும்
வேடிக்கை பார்க்கும் சில அப்புரானிகளும்
அப்புராணிகளை கிண்டல் செய்து கெத்து காட்டும் சில வெத்துவேட்டுகளும்
காசேயில்லாமல் நொறுக்குத்தீனிக்காக
நண்பர்களுடன் ஒட்டிவரும் ஓசியும்
காசுயிருந்தும் வெளியேடுத்து செலவுசெய்யாத கஞ்சனும் 
கெத்து கெத்து என பெண்களிடம் அவனும் பேசாமல்
 அடுத்தவனையும் பேசவிடாமல் செய்யும் வகுப்பு தாதாக்களும்
பெண் என்றாலே ஓடிபோய் பேசும் ஜொல்லுக்களும் 
வகுப்பில் இருப்பது வகுப்பறை தந்த பொக்கிஷம்தானே
 
வீட்டுப் பாடங்களை ஞாபகப்படுத்தும் படிப்பாளிகளும்
 அந்த வீட்டுப் பாடங்களை ஞாபகப்படுத்தினால் படிப்பாளிகளை மிரட்டுபவர்களும்
 வீட்டுப் பாடங்களையே செய்யாமல்
 மறந்து விட்டோம் என  அடிவாங்குபவர்களும்
ஆசிரியரிடம் அடிவாங்கும்போது அழுகவோ சத்தமே போடமல் வலித்தும் காட்டாமல் அமைதியாக நடந்துபோகும்
 ஒருநிமிட ரோபோக்களாகவும் மாற்றியதும் பள்ளிதானே

மதியை வேலைக்கு முன்பே
அடுத்தவரின் டிபன்பாக்ஸூகளை திருடி தின்னும் மாப்பிள்ளை பெஞ்ச்காரர்களின் சேட்டையும் 
மதியவேளை உணவின்போது 
வெறும் டிபன் பாஸூகளை தேடி 
கண்டுபிடித்த தருணமும் 
பிடிச்ச பாடத்திற்காக மட்டும் படிக்கும் மாணவர்களும் 
 பிடிக்காத வாத்தியார்களுக்காக பாடத்தை வெறுப்பவர்களும் 
பிடிக்காத பாடத்தை பிடித்த ஆசிரியர்களுக்காக படிப்பவர்களும் 
சிலருக்கு சற்றும் எதிர்பாராத நேரத்தில் வந்த முதல் காதலும் 
பலருக்கு சொல்லாமலே மனதில் பட்டாம்பூச்சியை மறைந்த காதலும் 

பீ.டி வகுப்புக்காக காத்திருந்த நேரமும் 
 பீ.டி வகுப்பை முடித்தும் 
அடுத்த வகுப்பை கட்டடித்து 
ஆசிரியரிடம் திட்டு வாங்கிய பல சம்பவங்களும்
வகுப்பு வாரியாக சண்டை போட்டு விருமாண்டியாக  மாறியதுபோல்  உணர்வுகளையும் கொடுத்தத பள்ளி
 சிறுவயதின் இனிமை தானே!

தாலாட்டு பாடும் தமிழ் பாடமும் 
தஸ்புஸ் என பேசு சொல்லித்தரும் ஆங்கிலமும்
புரியாத உலகத்தைக் காட்டி பிரமிக்க வைக்கும் கணிதமும்
ஆசையை தூண்டுவது போல் ஆச்சரியத்தை தூண்டும் அறிவியலும்
பல நேரங்களில் தூங்க வைக்கும் சமூக அறிவியலும்
விட்டில் பூச்சியாய் எண்ணங்களை 
சிறகடித்து பறக்க காரணமாகியது 
நேரங்கள் பறந்திட 
வார்த்தைகள் தடுமாறிட
 உணர்வுகள் தொடங்கிட 
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கிட
 ஒரே டிபனை பலரும் பரிமாறிட
 நெஞ்சில் என்றும் நீங்காத நினைவுகளாய் மாறிய பள்ளியின் பருவம்
 என்றும் இனிமைத் தரும் 
நீங்காத இன்பம் தானே.....!
Poem hear in audio click below or watch in Spotify 👇👇👇👇👇👇👇👇👇






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close