நான் பிழைப்பேனோ - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வெள்ளி, 4 ஜூன், 2021

நான் பிழைப்பேனோ

பெரும்தொற்று  எனும் போரில்
மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்;
வீட்டில் தனிமையில் தவிக்கிறோம்!
ஒரு நாட்டை அழிக்க!
முன்பு ஆயுதங்களில் போரோ!
அன்று  அனுஆயுதங்களில் போரோ!
முன்பு அமைதிக்காக ஏங்கும் சாலைகளும்
இன்று வாகனத்திற்க்காக ஏங்குகின்றன,
எங்களின் உயிரை காப்பாற்ற
 நெருங்கிய உறவுகளிடமிருந்து நெருங்கிகொள்ளாமல்
அருகிலிருக்கும் தோழர்களும்
அருகாமையிலும் போகவைக்கும் உயிரிஆயுதபோரோ,

உயிர்காக்க முககவசம் போட்டோம்
மூச்சுவிட சிரமமாய்‌ மாற
ஆக்ஸிஜனுக்காக கையேந்தியும்
தடுப்பூசி வாங்க வீதியிலே டோக்கனுக்காகவும்
 தடுப்பூசி போட முன்பதிவுக்காகவும்
தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்க அரசியல்வாதிகளுக்காகவும் 
அரசாங்கமும் சென்டர் விட்டு தடுப்பூசிக்காகவும்
கார்ப்பரேட்டுகள் டென்டர்க்காகவும்
காத்திருக்கும் வேலையில்...
நாட்டின் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்க
நாட்டின் மக்களும் விறகுகட்டைகளுக்குள் எறிய
நாடும் புதுப்புது சட்டமென மக்களுக்கு நெருக்கடி கொடுக்க!
வறுமையால் மக்கள் பட்டினியிலிருக்க
வீட்டின் அடுப்பும் ஏக்கத்துடன் பார்க்க
வேலையில்லாமல் இளைஞர்களும் வீட்டிலிருந்து காத்திருக்க!
ஓடும் வண்டிகளும் மினி மருத்துவமனையாக மாற
புவிவெப்பமயாமதலும் மக்களின் ‌உயிரை குடிக்கிறது
இயற்கை பேரிடர்களால்......
இயற்கை மருத்துவமும்  நன்மைகள் மறைக்கப்பட்டு
செயற்கை ‌மருத்துவமும் பணத்தால் 
எட்டாகனியாக‌மாற
படித்துப் அனைவரும் பாமர்களாய் இருக்க
அந்த‌பாமரர்களுள் ‌ஒருவனாக நானும் இருக்கிறேன்
இனி நான்  இந்த உலகில் பிழைப்பேனோ.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close